Sunday, May 04 12:08 pm

Breaking News

Trending News :

no image

மகனே உதயநிதி…! முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட தடை…!


சென்னை: மகனாக இருந்தாலும், உதயநிதிக்கு தந்தையும், முதலமைச்சருமான ஸ்டாலின் போட்ட அதிரடி தடை தான் இப்போது திமுக முகாமில் பேச்சாக இருக்கிறது.

திமுக என்றால் வாரிசு அரசியல், குடும்ப உறுப்பினர்களின் தலையீடு… அது ஆட்சியிலும் சரி… அதிகாரத்திலும் சரி என்ற பேச்சு பரவலாகவே உண்டு. அப்படிப்பட்ட எந்த விமர்சனங்களுக்கும் கடுகளவும் இடம் கொடுத்துவிட கூடாது என்ற அடிப்படையில் கட்சியினருக்கு கடும் கட்டளைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்து இருக்கிறார்.

இந்த அரசின் மிக முக்கிய செயல்பாடு என்பது கொரோனாவை ஒழிப்பதில் தான் இருக்க வேண்டும் என்று அவர் ஏற்கனவே கட்டளை பிறப்பித்து இருக்கிறார். ஆடம்பர விழா, ஏற்பாடுகள், கட் அவுட்கள், பேனர்கள் என எதுவும் இருக்கக்கூடழத என்று உத்தரவும்  இடப்பட்டுள்ளது.

ஆனால் முதலமைச்சரின் கட்டளையை மீறி அமைச்சரும், ஆவடி எம்எல்ஏவுமான நாசர் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். ஆவடி எம்எல்ஏ அலுவலகத்தை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை வைத்து மிக பிரம்மாண்டமாக திறந்து வைப்பது என்று. விழாவுக்கு பிளக்ஸ்கள், கட் அவுட்கள், போஸ்டர்கள் என ஆவடியே அமர்க்களப்பட்டு போயிருக்கிறது.

இந்த விவரங்கள் அனைத்தும் அப்படியே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போயிருக்கிறது. அவ்வளவு தான்… விழாவுக்கே தடை போட்டுவிட்டார். விழாவையே ரத்து செய்து உத்தரவிட்டு விட்டார். விழா நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாகே இந்த உத்தரவு வெளியாக அமைச்சர் தரப்பு, கட்சியினர் என பலரும் சோகமாயினர்.

ஆனால் தமது உத்தரவை மீறுவது மகனே என்றாலும் மீறக்கூடாது… அரசின் உத்தரவு, உத்தரவு தான் என்று உதயநிதிக்கும் சொல்லப்பட்டு இருக்கிறதாம். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அதிரடி பலரது தரப்பிலும் பெரும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. இந்த அதிரடி அனைத்து விஷயங்களிலும் தொடர வேண்டும் என்று நடுநிலையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Most Popular