கொரோனா நிதி ரூ.2000 வாங்கலையா..? இதோ சூப்பர் சான்ஸ்…!
சென்னை: ரேஷன் கடைகளில் கொரோனா 2000 ரூபாய் வாங்காதவர்கள் அந்த பணத்தை ஜூன் மாதம் பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் தவித்து வரும் மக்களின் தேவைகளுக்காக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் மே 15ம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், சொந்த ஊருக்கு சென்றது ஆகிய காரணங்களினால் 2000 ரூபாயை பலரும் பெறமுடியாத நிலை ஏற்பட்டதாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், ரேஷன் கடைகளில் கொரோனா முதல் தவணையாக 2000 ரூபாய் வாங்காதவர்கள் அந்த பணத்தை ஜூன் மாதம் பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல் தவணை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாகவும் செய்தி குறிப்பு ஒன்றில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.