நடிகர் அஜித்தின் சொத்து மதிப்பு…? இவ்வளவு தானா….?
நடிகர் அஜித்துக்கு சொத்து எவ்வளவு இருக்கிறது என்று ஒரு தகவல் இணையத்தையே புரட்டி போட்டு வருகிறது.
அடித்ததே சொல்லலாம்… தமிழ் சினிமாவின் சிறந்த, அலட்டிக் கொள்ளாத பொது நிகழ்ச்சிகளில் எங்கும் தலைகாட்டாமல் தான் உண்டு, தமது தொழில் உண்டு என்று இருப்பவர் நடிகர் தல அஜித்.
அவரின் வலிமை படத்துக்காக ரசிகர்கள் மட்டுமல்ல…. திரையுலகமே காத்திருக்கிறது. படத்தை ஹெச் வினோத் இயக்கி உள்ளார். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் பிரம்மாண்டத்துக்கு குறைவே இல்லை என்று கூறலாம். அப்படித்தான் படம் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந் நிலையில் நடிகர் அஜித்துக்கு உள்ள சொத்து விவரங்கள் குறித்து இணையத்தில் ஒரு தகவல் உலாவிக் கொண்டு இருக்கிறது.
அதாவது தல அஜித்துக்கு இருக்கும் சொத்து மதிப்பு 300 கோடி ரூபாய் என்று அந்த தகவல் கூறுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதை பற்றி அவரது ரசிகர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவர்களின் கவனம் முழுக்க முழுக்க வலிமை எப்போது ரிலீசாகும் என்பது பற்றியதாக தான் உள்ளது.