அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு…? அறிவித்தார் ஓபிஎஸ்
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சட்ட சபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சர்கள், பாமக சார்பில் அன்புமணி, ஜி.கே. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு எட்டியது. இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.