இயற்கை பேரிடரை சந்தித்து வரும் இந்தியா..! பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரை
டெல்லி: இந்தியா தற்போது இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
74வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி பின்னர், தற்போது உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:
சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம். நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.
கொரோனாவிற்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி, கொரோனாவிற்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம். மேலும், இந்தியா தற்போது இயற்கை பேரிடர் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
அதனை சமாளிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் 75வது சுதந்திர தின விழா மிக பிரம்மாண்டமாக இருக்கும் என தெரிவித்தார். நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் கூறினார்.