Sunday, May 04 12:41 pm

Breaking News

Trending News :

no image

முதலமைச்சர் சகோதரர் கொரோனாவுக்கு பலி..! அதிர்ந்த மக்கள்…!


கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கொரோனா வைரஸ் தொற்றின் பசி எப்போது அடங்கும் என்று தெரியவில்லை. அரசியல் பிரபலங்கள், சினிமா துறையினர், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரையும் போட்டு தாக்கி வருகிறது.

அதில் லேட்டஸ்ட்டாக ஒரு மாநில முதலமைச்சரின் சகோதரரையே காவு வாங்கி இருக்கிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். தமது சகோதரர் மறைவு செய்தி குறித்து அறிந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி துடித்து போய்விட்டாராம். முதலமைச்சர் சகோதரர் மரண செய்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரையும் உலுக்கி உள்ளது.

Most Popular