என்ன நடக்குது..? ஸ்டாலினுக்கு அண்ணாமலை 'திடீர்' பாராட்டு…!
சென்னை: தமிழக அரசையும், திமுகவையும் கடுமையாம விமர்சித்து வரும் பாஜக அண்ணாமலை திடீரென பாராட்டி உள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திமுக தலைமையிலான அரசை அதிமுகவை விட கடுமையாக விமர்சித்து வரும் கட்சி பாஜக. அதிலும் அண்மையில் அக்கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலையின் விமர்சனம் படு உச்சத்தில் உள்ளது.
கொரோனா கால செயல்பாடு, அமைச்சர்களின் நடவடிக்கைகள், தடுப்பூசி விவகாரம், எஸ்பி வேலுமணி ரெய்டு, நீட் விவகாரம் என ஏதேனும் ஒரு பிரச்னையில் தமிழக அரசையும், ஸ்டாலினையும் உண்டு, இல்லை என்று போட்டு தாக்கி வருவார்.
அவரின் விமர்சனங்களையும் மக்கள், மீம்சுளாக மாற்றி நையாண்டி செய்தாலும் கட்சி தரப்பிலும், தமது தரப்பிலும் முன் வைக்க வேண்டிய கருத்துகளை பளிச்சென்று முன் வைக்கிறார் அண்ணாமலை.
அதன் அடிப்படையில், தமிழக அரசை திடீரென பாராட்டி தள்ளி உள்ளார் அண்ணாமலை. சென்னை திநகரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து தமிழ் கையேடு ஒன்றை பாஜக வெளியிட்டது. இதனை அண்ணாமலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் 25ம் தேதி அன்று நாள் முழுவதும் விவசாயிகளுடன் பாஜக பேச இருக்கிறது. உழவர்களுடன் ஒரு நாள் என்ற பெயரில் வேளாண் சட்டங்கள் பற்றிய விவரங்களை விவசாயிகளுக்கு தெரியபடுத்தவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வேலுமணி வீடு, அலுவலகங்களில் ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின்னரே சோதனை தேவையா இல்லையா என்பது தெரிய வரும்.
வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள தமிழக அரசை பாராட்டுகிறோம். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னரே என்ன திட்டங்கள், செயலாக்கம் குறித்து கருத்து சொல்வோம். வேளாண் சட்டங்களை விவசாயிகள் வரவேற்றுள்ளனர், ஆனால் அரசியல் கட்சியினர் தான் அதை எதிர்க்கின்றனர் என்று கூறினார்.