அவ்வளவு தான்… மேட்டர் ஓவர்…? அதிமுகவுக்கு ஷாக் தரும் பாஜக…?
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக டாட்டா காட்டக்கூடும் என்று தகவல்கள் பரவி உள்ளன.
தற்போது தமிழக பாஜக புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளது, அக்கட்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சி உள்ளதாக கருதப்படுகிறது. இளமையின் வேகமும், முதுமையின் அனுபவமும் இணைந்து காணப்படும் தமிழக பாஜகவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல டெல்லி தலைமை திட்டமிட்டு உள்ளது.
அதற்கான களமாக உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்தி கொள்ள பாஜக திட்டமிட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏக்கள் கிடைத்துவிட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த பாஜக தீர்மானித்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதாவது இந்த உள்ளாட்சி தேர்தலை கூடுமானவரை தமக்கு சாதகமான களம் ஆக மாற்ற பாஜக திட்டமிட்டு உள்ளது. இன்னும் சொல்ல போனால் யாரும் எதிர்பாராத தருணத்தில் அதிமுகவை தேர்தல் கூட்டணியில் இருந்து கழற்றிவிட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
அதற்கு சில காரணங்களும் பட்டியலிடப்படுகின்றன. முதலில் சட்டசபை தேர்தல் தோல்விக்காக பாஜக பழிபோடும் அதிமுக முக்கிய பிரமுகர்களின் பேச்சுகள் டெல்லி வரை கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். பாஜக, அதிமுக என இரு கட்சிகளின் மேலிடத்து நிர்வாகிகள் முட்டிக் கொண்டதால் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சரவை இடம் கிடைக்காமல் போனது.
மத்திய அமைச்சரவையில் பதவி கிடைக்காமல் போனதால் அதிமுக முகாம் வருத்தத்தில் இருக்கிறது. அதே போன்று, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு டாட்டா காட்டிவிட்டு 9 மாவட்டங்களில் தமது பலத்தை நிரூபிக்க பாஜக திட்டமிட்டு உள்ளது.
இளம் தலைவர் இருப்பதால் புதியவர்கள் பலருக்கு வாய்ப்பு அளித்து, மக்கள் மத்தியில் கட்சியை வளர்க்கவும் பாஜக பிளான் வைத்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை அதிமுகவை கழற்றிவிட்டால் தற்போதுள்ள சூழலில் அது அதிமுகவுக்கு பெரும் பாதிப்பாகவே முடியும் என்று தோன்றுகிறது.
முன்னாள் அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகள் என்று ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு திமுகவில் வேகமாக காரியங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி இருக்கும் பட்சத்தில் அதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க முடியும் என்று முக்கிய அதிமுக தலைமை பிரமுகர்கள் கருதுவதாக தெரிகிறது.
இப்படி பல பாயிண்டுகளை அதிமுக அசை போட்டு பார்த்தாலும் 9 மாவட்ட உள்ளாட்சியில் பலத்தை பரிசோதித்து பார்த்துவிட வேண்டும் என்று பாஜக நினைக்கிறதாம்… எனவே கூட்டணி நிலைமை எப்போது வேண்டுமானாலும் டமால் ஆகலாம் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்…!