ஆக்சிஜன் அளவை அதிகரிக்கணுமா..? கவலை வேண்டாம்… இதை சாப்பிடுங்க..!
சென்னை: உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்க சில முக்கிய உணவு வகைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் போதும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
2வது ஆண்டாக இந்த உலகம் கொரோனா காலத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் சத்தான உணவு பொருட்கள் நமது உடலுக்கு ரொம்ப முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் அளவை சீராக வைக்க நாம் நமக்கு தேவையான உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்தகைய உணவு பொருட்கள் என்ன என்ன உள்ளன என்பதை பலரும் தெரியாத நிலையே நிலவி வருகிறது. அப்படிப்பட்ட உணவு வகைகளை கைதேர்ந்த மருத்துவர்கள் பட்டியலிட்டு உள்ளனர்.
மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ள முதல் உணவாக அடையாளம் காட்டப்படுவது கிராம்பு. நமது உடலுக்கு தினமும் ஒரு கிராம்பாவது ரொம்ப அவசியம். அதற்கு அடுத்த மருத்துவர்கள் கை காட்டுவது மஞ்சள். பிறகு பட்டை, துளசி, எலுமிச்சை, பயறு வகைகளை பட்டியலிடுகின்றனர்.
பயறு வகைகளில் பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டை கடலை, காராமணி ஆகியவற்றை சாப்பிடுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றுடன் கீரை வகைகளை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பசலை கீரை, முருங்கை கீரை, தர்பூசணி, அவித்த வேர்க்கடலை, அன்னாசி ஆகியவற்றை தவறாது உட்கொண்டு வந்தால் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம் என்பது மருத்துவர்கள் தெரிவிக்கும் முக்கிய விஷயம்.