அண்ணாமலை சுத்த வேஸ்ட்.! சுளுக்கெடுத்த தமிழக அமைச்சர்…!
கோவை: இதுவரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை பதில் சொல்லலை… அதை கேட்டுவிட்டு வாங்க, பின்னர் பேசலாம் என்று அதிரடியாக கூறியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மீது எப்போதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி கொண்டே வருபவர் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த குற்றச்சாட்டுகள். ஆவேசம் அனைத்தும் கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் இருந்தே காணப்படுகிறது.
இந்த தருணத்தில் அண்ணாமலை பற்றி கடுமையான கருத்துகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார். அவர் தெரிவித்து உள்ளதாவது:
தனிப்பட்ட முழு அதிகாரம் கொண்ட அமைப்பு, ஆணையத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயல்களில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அதன் வெளிப்பாடு தான் மின்சார சட்ட திருத்த மசோதா.
கர்நாடகாவில், உத்தரபிரதேசத்தில், குஜராத்தில் உள்ள மின் கட்டணங்களை இங்குள்ளோர் பேச வேண்டும். ஆனால் வேலை வெட்டி இல்லாத நபர் ஒருவர் உங்களை சந்திப்பது, நேரலையில் வரவேண்டும், தலைப்பு செய்தியாக போட வேண்டும், அவர் பேசியது குறித்து எங்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.
நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அவர் பதில் கூறவில்லை. நிலக்கரி இறக்குமதியை தமிழக அரசு எவ்வளவு செய்தது, மத்திய அரசு எவ்வளவு நிர்ணயித்துள்ளது என கேட்டேன். அதற்கு பதிலே இல்லை.
அடுத்தமுறை அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது இதற்கு பதில் வாங்கி விடுங்கள். அப்படியானால் அடுத்தமுறை அவர் தொடர்பாக நீங்கள் கேள்வி கேட்கலாம், இல்லையென்றால் மறந்துவிடலாம்.
புரிந்து கொள்ள பக்குவம் இல்லை, தெரிந்து கொள்ள முயற்சியும் இல்லை, இந்த இரண்டுமே இல்லாத நபர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார்.