Sunday, May 04 07:49 pm

Breaking News

Trending News :

no image

ஆப்பிளால் கொரோனாவை துரத்திய 100 வயது மூதாட்டி...! ஆ....ச்சர்யத்தில் மருத்துவ உலகம்


பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹுவின ஹடகளியைச் சேர்ந்தவர் ஹல்லம்மா. வயது 100. அவர் வங்கியில் பணிபுரியும் மகன், மருமகள் மற்றும் பேரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

ஜூலை 16-ல் நடத்தப்பட்ட பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஹல்லம்மா கூறியதாவது:

மருத்துவர்கள் நன்றாக சிகிச்சை அளித்தனர். வழக்கமான உணவுடன் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தேன் என்றார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி முழு குணமடைந்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Most Popular