அம்மா இல்லம் என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடு…! அசத்தும் அதிமுக..!
சென்னை: அம்மா இல்லம் என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடு அமைத்து தரப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
அனைவருக்கும் சோலார் அடுப்பு.
அம்மா இல்லம் என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடு.
அனைத்து இல்லங்களுக்கும் விலையில்லா அரசு கேபிள் சேவை.
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.
ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்.
100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும்.
நம்மாழ்வார் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும் .
நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.
மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக உயர்த்தப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.
நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.
ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்க ரூபாய் 25000 மானியம் வழங்கப்படும்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்படும்.
மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறை அமல்.
பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுகடைகள் படிபடியாக மூடப்படும்.
கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி.
கல்விக் கடன் முழுமையாக ரத்து.