இந்த குழந்தையின் வயசு வெறும் 7 நாள்தான்…! ஆனா நடந்த சோகம் இருக்கே… அப்பப்பா…!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிறந்த 7 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்த ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தொற்றுகள் ஒரு பக்கம் பரவி வந்தாலும், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந் நிலையில் தூத்துக்குடியில் பிறந்த 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த குழந்தையின் தாய்க்கு கொரோனா தொற்று முன்னதாக இருந்துள்ளது. அதன் பின்னர் அந்த குழந்தைக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 7 நாள் ஆன குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.