நடிகர் விஜய்யை செஞ்சுவிட்ட சேட்டன்கள்…! சல்லி, சல்லியா போச்சே..!
நடிகர்கள் என்றாலே தனி மவுசுதான். அதிலும் அவர்களை கண்டால் ரசிகர்கள் போடும் குதியாட்டத்தை சொல்லவே வேண்டாம். கேரளாவில் நடிகர் விஜய்க்கு அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அவர் தற்போது வெங்கட் பிரபு டைரக்ஷனில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்(GOAT) என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இணைந்து கலக்கி வருகிறது.விறுவிறுப்பான காட்சிகளுடன் படத்தின் பெரும் பகுதி ஷூட் செய்யப்பட்டுவிட்டது.
படத்தின் கிளைமாக்சுக்காக கேரளாவுக்கு நடிகர் விஜய்யுடன் படக்குழு சென்றிருக்கிறது. திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் வந்திருந்த நடிகர் விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள், அவரது காரையும் பின் தொடர்ந்து சென்றனர். விஜய் ஓட்டலுக்கு செல்லும் வரை இதே நிலைதான்.
ரசிகர்கள் கூட்டம் அலைமோத ஒரு கட்டத்தின் விஜய்யின் கார் கண்ணாடி நொறுங்கியது. காரும் பலத்த சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் கொண்ட வீடியோ தான் இப்போது இணையத்தில் டாப்பாக வலம் வருகிறது.
அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.