இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை பார்க்கலாம்:
திருச்சியில் உள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார்.
அரையாண்டு தேர்வு விடுமுறைக்காலம் முடிந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
சாமானிய மக்களுக்கான போராட்டம் தொடரும் என்று கட்சி ஆண்டு விழாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
திருப்பதியில் இன்று அதிகாலை 4 மணி முதல் இலவச தரிசனம் செய்வதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளன.
ஆதாரை ஆயுதமாக பயன்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
திருச்சி வரும் பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளதாகவும் அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
591வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர்.
இஸ்ரேல், ஹமாஸ் குழு இடையேயான போரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.
புரோ கபடி தொடரில் இன்று தபாங் டெல்லி அணியானது, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.