கொரோனா சிகிச்சைக்கு பணம் இல்லையா…? பிரபல வங்கியின் ‘சூப்பர்’ பிளான்
கொரோனா சிகிச்சைக்கு குறைந்த வட்டி தொகையுடன் கூடிய சிறப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி செயல்படுத்துகிறது.
நாட்டில் கொரோனா என்னும் வைரஸ் தொற்றின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகி உள்ளனர். பிரபலமான நிறுவனங்களும் சொல்லமுடியாத நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
சரி…பணம் இல்லாத சூழ்நிலையில் என்ன பண்ண முடியும் என்பவர்களுக்கு தான் எஸ்பிஐ ஒரு சூப்பர் திட்டத்தை முன் வைத்துள்ளது. கொரோனா சிகிச்கைக்கு பணம் தேவையா என்ற அடிப்படையில் நாட்டின் மிக பெரிய பொது துறை வங்கி எஸ்பிஐ அர்த்தமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் பெயர் கவாச் பெர்சனல் லோன் திட்டம் ஆகும். இதன் பற்றிய முழு விவரங்களை எஸ்பிஐ தமது டுவிட்டர் பக்கத்திலும் விரிவாக விளக்கி உள்ளது.
ஆண்டு 8.50 சதவீதம் வட்டியில் கடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள், கண்டிஷன்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
• ஒரு நபர் அதிகளவாக ரூ.5 லட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம்.
• கடனை திருப்பி செலுத்தும் காலம் 60 மாதங்கள். இதில் 3 மாதங்கள் சலுகையாக தரப்படும்.
•கடனை பெற விரும்புவர்கள் கொரோனா பாசிட்டிவ் உள்ளது என்ற அறிக்கையை அளிக்க வேண்டும்.
• 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அல்லது அதற்கு பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தால், அந்த நபர் அல்லது குடும்ப உறுப்பினர் சிகிச்சைக்காக கடன் பெறலாம்.
• ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்கள் இந்த கடனை வங்கி கிளை, யோனோ செயலி மூலம் பெறலாம்.
• மேலும் ஏதேனும் தகவல் பெற bank.sbi என்ற இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். வேறு ஏதேனும் தகவல்களுக்கு 1800112211 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.