சூப்பர்… ட்ரோன் மூலம் வருது கொரோனா மருந்து…! உதவிக்கு பிளிப்கார்டு..!
ஐதராபாத்: பிளிப்கார்டு உதவியுடன், ட்ரோன் மூலம் கொரோனா மருந்துகளை வினியோகம் செய்ய தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் நகரங்களில் மட்டும் அல்லாது, கிராமப்புறங்களில் கொரோனா உச்சத்தில் இருக்கிறது. குக்கிராமங்களில், போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு இன்னமும் கொரோனா மருந்துகள் வினியோகம் செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
குறிப்பாக, தெலுங்கானாவில் ஏராளமான கிராமங்களில் கொரோனா தாக்கி உள்ளது. ஆனால் அந்த கிராமங்களுக்கு எளிதில் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து வசதி இல்லை. இதை தீர்க்க தெலுஙகானா அரசு ஒரு புதிய ஐடியாவை கையில் எடுத்துள்ளது.
தொலைதூரங்களில் உள்ள கிராமங்களில் ட்ரோன் மூலம் தடுப்பூசிகளையும், கொரோனா மருந்துகளையும் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளது. அதற்காக பிரபல மின்னணு வணிக நிறுவனமான பிளிப்கார்டு நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தை தெலுங்கானா அரசு நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
மக்களின் உயிர் பாதுகாப்புக்கு ட்ரோன் போன்று நவீன வசதிகளை பயன்படுத்துவது முக்கியமானதாகும் என்று பிளிப்கார்டு தெரிவித்துள்ளது.