மோடியால் தான் எல்லாம் நடந்துச்சு..! மேடையில் அறிவித்த அமைச்சர்
சென்னை: பிரதமர் முயற்சியால் ஒலிம்பியாட் தொடரை தமிழகத்தில் நடத்த முடிந்தது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறி உள்ளார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் துவக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பட்டு வேட்டு சட்டையில் காட்சி அளித்த முதல்வர் ஸ்டாலின், வேட்டி சட்டையில் பிரதமர் மோடியை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல் முருகன், ஆளுநர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டு பண்ணுடன் தொடங்கிய இவ்விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் வரவேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமரின் முயற்சியால் ஒலிம்பியாட்டை தமிழகத்தில் நடத்த முடிந்தது.
நிகழ்வுக்கு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். மேலும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் 2 ஆயிரம் பங்கேற்பாளர்களையும், ரசிகர்களையும் வரவேற்கிறேன் என்று கூறினார்.