மீரா மிதுனுக்கு பைத்தியம்…? மனநல சிகிச்சை தர போலீசார் திட்டம்
சென்னை: மீரா மிதுனுக்கு மனநல சிகிச்சை தர போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தம்மை பற்றி உலகம் எப்போதும் பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு ரகம். என்னை பற்றி மட்டுமே உலகம் பேச வேண்டும் என்று ஏதாவது செய்பவர்கள் ஒரு ரகம். இப்படி இந்த 2 ரகத்தை பிய்த்து போட்டு ஒரு புது ரகம் என்று கூறினால் அது நடிகை மீரா மிதுன்தான் என்கின்றனர் சமீபத்திய அவரது நடவடிக்கையை பார்த்தவர்கள்.
மாடலிங்கில் இருந்து சினிமா உலகம்… அப்படியே பிக் பாஸ் சீசன் என்று போனவர்… முன்னணி நடிகர்களையும், இயக்குநர்களை பற்றியும் தாறுமாறாக பேசினார். பின்னர் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர் கஞ்சா அடித்து அதன் புகையை சாய்பாபா போட்டோவில் விட்டு அலப்பறை பண்ணினார்.
எல்லாத்துக்கும் மேலாக பட்டியலினத்தவரை பற்றி வாய்க்கு வந்ததை பேசி ஒட்டு மொத்த மக்களின் கோபத்தையும் சந்தித்தார். வாய்க்கு வந்த படி 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய…. கடும் கண்டனங்கள் எழுந்தன.
கைது நடவடிக்கை கட்டாயம் என்பதை அறிந்து கேரளாவுக்கு ஓடிச் சென்று ஒளிந்து கொண்டார். விடாது துரத்திய தமிழக போலீஸ் கைது செய்து சென்னை கூட்டி வந்தது. காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது இஷ்டத்துக்கு ஏதேதோ உளறி தள்ளி போலீசை கடுப்பேற்றினார். சாப்பாடு போட மாட்டேங்கிறாங்க, கையை உடைக்க முயற்சிக்கிறாங்க என்று பேசி அட்ராசிட்டி செய்தார். வரும் 27ம் தேதி நீதிமன்ற காவல் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் தற்போது அவர் புழலில் உள்ளார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் இங்கேதான் ஒரு பிரச்னை வந்திருப்பதாக போலீசார் தரப்பில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, தாம் என்ன பேசினோம் என்பதை மாற்றி, மாற்றி இஷ்டத்துக்கு பேசி வருகிறாராம் மீரா மிதுன்.
அப்படி, இப்படி என்று குழப்பி பேசி விசாரணையின் போக்கை திசை திருப்ப முயற்சிக்கலாம் என்று தெரிகிறது. ஆகவே, உடனடியாக அவரை மனநல சிகிச்சைக்கு ஆட்படுத்தலாம் என்ற தீவிர யோசனையில் உள்ளனராம். அதன் பிறகு அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளலாம் என்ற ஐடியாவில் இருக்கின்றனராம்…!