DANGER… என்ன நடக்க போகுதோ…? கலக்கத்தை தந்த ‘அறிவிப்பு’
சென்னை: புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. வரும் 3ம் புயலாக உருவாகக்கூடும் என்றும் அதற்கு மிக்ஜாம் என்றும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை மக்களை போட்டு பாடாய்படுத்தியது. இடைவிடாத மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, போட்டி தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.
இந் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். வலுப்பெற்று, வரும் 4ம் தேதி வடதமிழகம் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் புயலாக நிலவும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை உண்டு.
வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளார்.