Sunday, May 04 01:08 pm

Breaking News

Trending News :

no image

இன்னிக்கு எங்கெல்லாம் ஸ்கூல் லீவு… இதோ சொல்லிட்டாங்க


சென்னை; தொடரும் கனமழை எதிரொலி எந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து தள்ளி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை, ஈரோடு என பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஆங்காங்கே பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோவைக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழை எதிரொலியாக குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் இன்று விடுமுறையா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular