பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக்
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் ஜனநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 61.
இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியவர் ஜனநாதன். கடந்த வியாழக்கிழமை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் லாபம் திரைப்பட படப்பிடிப்புக்கு பின்னர் வீட்டில் சுய உணர்வில்லாத நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்துவந்த எஸ்பி ஜனநாதன் இன்று காலமானதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அவரது மரணம் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.