துபாய் இல்லியாம்… சிங்கப்பூராம்…! நாடு நாடாய் ஓடும் கோத்தபய ராஜபக்ஷே
சிங்கப்பூர்: துபாய் இல்லை, சிங்கப்பூர் செல்கிறார் கோத்தபய ராஜபக்ஷே என்று தகவல்கள் கசிந்துள்ளன.
செய்த பாவம் சும்மா விடாது என்று பெரியவர்கள் சொல்வது உண்டு. அப்படித்தான் இப்போது இலங்கையின் நிலைமையை கண்டு அனைவரும் கூறி வருகின்றனர். மக்களுக்கான அரசாங்கமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு லேட்டஸ்ட் சாட்சியாக காட்சி தருகிறது இலங்கை.
மக்களின் புரட்சி தினம் தினம் வெடித்துக் கொண்டிருக்க ஆட்சியாளர்கள் சொந்த நாட்டில் இருந்து தெறித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக அதிபர் கோத்தபய எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் புதுப்புது தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதில் லேட்டஸ்ட்டாக மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்ஷே சிங்கப்பூர் செல்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத சர்வதேச செய்திகள் வெளியாகி உள்ளன. மாலத்தீவில் இருந்து குடும்பத்துடன் துபாய் போவதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு தற்போது சிங்கப்பூர் பயணத்துக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. சொந்த நாட்டை, வீட்டை விட்டு இப்போது நாடு, நாடாக அவர் ஓடும் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.