அமலாக்கத்துறை அதிரடியால் தமிழக அமைச்சர்கள் கைதா…? திகிலாகும் திமுக
டெல்லி: தமிழக அமைச்சர்கள் 2 பேர் விரைவில் கைதாகலாம் என்று வெளியாகி உள்ள தகவல்களினால் திமுக முகாம் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நாடு முழுவதும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் முன் இப்போதும் இல்லாத அளவுக்கு படு ஸ்பீடில் இருக்கின்றன. அதற்கு மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்படுவது அமலாக்க சட்டத்திருத்தத்துக்கு எதிராக தொடப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை 27ம் தேதி வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு.
அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரம் தரும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட 250 வழக்குகளில் சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதன் பின்னரே பாஜகவுக்கு எதிரான அல்லது எதிர் அரசியல் செய்யும் கட்சிகளுக்கு நெருக்கடி அதிகரித்து பல அமைச்சர்கள், எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.
இதை மேற்கோள் காட்டும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன ஓரு விஷயத்தையும் சுட்டிக்காட்டலாம். அதாவது, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பின்னரே, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் விசாரணைக்குள் வருவார், வெயிட் என்று கூறி இருக்கிறார்.
இதை சுட்டிக்காட்டும் விவரம் அறிந்தவர்கள், இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் விரைவில் நடக்கலாம் என்று கூறுகின்றனர் விஷயம் அறிந்தவர்கள். தமிழகத்தில் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அடுத்த கட்டம் செல்வது நிச்சயம் என்கின்றனர் அவர்கள்.
பாஜகவின் அனைத்து நடவடிக்கைகளும் 2024ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தல் களத்தை நோக்கியே இருப்பதால் தமிழகத்தை தனியாக குறி வைத்துள்ளது. எப்படியும் சில பல எம்பிக்களை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அமைச்சர்களின் பண பரிவர்த்தனைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நேரம் வரும்போது அமலாக்கத்துறை என்ற அஸ்திரம் பாயும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
மத்திய பாஜக அரசின் மூவ்மெண்ட்டுகளை உற்று நோக்கி வரும் திமுக, அனைத்தையும் அறிந்தே இருப்பதாகவும் ஒரு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்து வருகின்றன. திமுக எப்படியும் எதையும் சமாளித்துவிடும் என்றும் விஷயம் அறிந்தவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.