#MariSelvaraj இதுதான் மனிதம்…! நெஞ்சத்தை உலுக்கிய வீடியோ
சென்னை: சொந்த மண்ணின் மக்கள் கஷ்டப்படும் போது கை கொடுத்த பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் வீடியோ தான் இப்போது இணையத்தில் டாப்.
தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகியவற்றை பருவமழை கொத்து பரோட்டா போட்டுவிட்டு சென்றுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளம், தண்ணீர் என்று மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்த விவரத்தை அறிந்த பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ், நேரடியாக களத்தில் இறங்கினார். அமைச்சர் உதயநிதிக்கு போன் போட்டு, தென்மாவட்ட மக்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி, களத்துக்கு அவரை உடனடியாக கொண்டு வந்ததில் முக்கியமானவர்.
அமைச்சர் உதயநிதி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற போது மாரி செல்வராஜூம் உடன் சென்றார். இது பெரும் விமர்சனமானது… இவர் என்ன அமைச்சரா? அதிகாரியா? கூட போவதற்கு என்ன இணையவாசிகள் போட்டு தாக்கினர்.
உச்ச நடிகர்கள் வராத போது, அரசியல் கட்சிகள் எட்டி பார்க்காத போது இவர் வந்ததில் என்ன தவறு? என்று தாறுமாறு விமர்சனங்களை பதிலடியால் விழிபிதுங்க வைத்தனர் நெட்டிசன்கள்.
இந் நிலையில் லுங்கியை மடித்துக் கொண்டு வெள்ள நீரில் தமது ஊர் மக்களை மீட்டு ஹெலிகாப்டரை கை காட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நல்ல மனிதரையா குறை சொல்வது என்னும் வகையில் அந்த வீடியோ இருக்கிறது… என்பது தான் விஷயமே…!
அந்த வீடியோ இங்கே கீழே இணைக்கப்பட்டு உள்ளது.