திமுகவில் திடீரென சேர்ந்த அதிபர் டிரம்ப்…! உறுப்பினர் அட்டை இதோ…!
சென்னை: திமுகவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சேர்ந்துள்ளார். அதற்கான உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க திமுக மும்முரம் காட்டி வருகிறது. ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. அதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திமுகவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சேர்ந்துள்ளார். அவரது பெயரில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டையில் அவர் சென்னை எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மற்றொரு அடையாள அட்டையும் டிரம்புக்கு இருக்கிறது. 'விவரமறியா வாரிசு' என்ற பெயரில் அந்த உறுப்பினர் அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டு உள்ளது.
அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி, டிரம்பின் பெயர் மலிவு அரசியல் மன்னர் ஆகும். டிரம்ப் அடையாள அட்டை, திமுகவில் அவர் சேர்ந்தது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடக்கலாம்.. அதுக்காக இப்படியா? என்று கேலி, கிண்டல்களும் எழுந்துள்ளன.