ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100…! வாகன ஓட்டிகள் ‘ஷாக்’….!
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100 கடந்துவிட்டது.
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால் அதன் பின்னர் நாள்தோறும் விலை உயர்வில் ஏறுமுகம்தான். நேற்று மற்றும பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டர் 31 காசுகளும் உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வு எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது ரூ. 101.86 காசுகளாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது இந்த ஆண்டில் இது 2வது முறையாகும். தொடரும் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.