மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
ஸ்டாக்ஹோம்: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. இயற்பியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹார்வே ஜே. ஆல்டர், மைக்கேல் ஹாப்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய 3 பேருக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஹெப்படைட்டிஸ் சி என்ற வைரஸை கண்டறிந்ததற்காக மூவருக்கும் இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.