23 மாவட்டங்கள்… கொரோனாவால் வந்த நிலைமை…! மக்களே.. ஜாக்கிரதை
சென்னை: குறைந்திருந்ததாக கருதப்பட்ட கொரோனா தொற்று 23 மாவட்டங்களில் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவின் தாக்கம் 2வது ஆண்டாக மக்களை பாடாய்படுத்தி வருகிறது. கொரோனாவின் 2ம் அலையின் காரணமாக வரும் 9ம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது.
கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக குறைந்து காணப்பட்ட கொரோனா தொற்று, கடந்த 3 நாட்களாக ஏறுமுகத்தில் இருக்கிறது. இன்று நேற்றைய விட பாதிப்பு அதிகம்… இன்றைக்கு 1986 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அவர்கள் 104 பேர் குழந்தைகள்.
இன்று மட்டும் 26 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். அதிகபட்சமாக தஞ்சையில் கொரோனா பாசிடடிவ் விகிதம் 2.5 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்த இடத்தில் திருச்சி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் பாசிட்டிவ் விகித்ம் 1.2 சதவீதமாக உள்ளது.
மற்ற மாவட்டங்களை விட கோவையில் தான் கொரோனா தொற்று அதிகம். இன்று 246 பேருக்கு பாசிட்டிவ் கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று 204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 23 மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. தெரிய வந்திருக்கிறது.
24 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை இல்லை என்ற போதிலும், கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மெதுவாக, ஏறுமுகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. எக்காரணம் கொண்டு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில் இருந்து கவனம் சிதறவேண்டாம், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.