கமல் படுத்தே விட்டான்ய்யா…! அதிர வைத்த பிரபல நடிகை
சென்னை: சென்னை வெள்ளம் பற்றிய கமல்ஹாசன் கருத்தை இஷ்டத்துக்கு விமர்சித்து இருக்கிறார் ஒரு நடிகை.
மிக்ஜாம் புயல், மழை சுவடுகள் இன்னமும் மறையவில்லை. வெள்ள பாதிப்பு மீட்பு, சுகாதார நடவடிக்கைகள் என அனைத்தும் எடுக்கப்பட்டு வந்த போதிலும் மக்கள் மனதிலும், எதிர்க்கட்சிகளிடம் விமர்சனங்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன.
அரசு இயந்திரம் இயங்கவில்லை என்ற கருத்துகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு இருக்க… லேட்டஸ்ட் பிரபல நடிகை ஒருவர் நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
மழை வெள்ள பாதிப்பின் போது அரசை குறை கூற இது நேரம் இல்லை என்று கமல்ஹாசன் வெளியிட்டு இருந்த பதிவே இதற்கு காரணம். அவரின் இந்த கருத்தை கண்டித்தும், கமலின் அரசியல் நிலைப்பாட்டை கேவலப்படுத்தியும் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு:
That படுத்தே விட்டானய்யா moment.
மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள்.
அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது என்று பதிவில் நடிகை கஸ்தூரி குறிப்பிட்டு உள்ளார்.
கஸ்தூரியின் பதிவை பார்த்து காண்டான நம்மவர் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதே கருத்தை பாஜக அண்ணாமலை முன் வைத்த போது எங்கே போனீர்கள்? நீங்கள் எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளீர்கள்? கமலின் முழுமையான பேட்டியை பார்த்துவிட்டு பேசுங்கள் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.