மரண படுக்கையில் அப்பா..! மனம் ‘மாறாத’ பிரபல நடிகை…!
தந்தை மருத்துவமனையில் சீரியசாக இருக்கும் தருணத்தில் திருமணத்துக்கு பிரபல நடிகை நயன்தாரா ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்னிந்தியாவின் பிரபல நடிகை நயன்தாரா. இன்றளவும் இவரது படங்களுக்கு தனிமவுசு உண்டு. நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் இன்னமும் ஏக குஷியில் இருக்கின்றனர்.
ஆனால் நயன்தாராவை பற்றி அவரது குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளதாக தெரிகிறது. பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகின்றனர்.
திருமணம் பண்ணி கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். படப்பிடிப்பின் போது கிடைக்கும் ஓய்வு நாட்களில் இருவரும் வெளியூர் பயணம் செல்வர். அப்போது அவரது போட்டோக்கள் இணையத்தில் படு டிரெண்டிங்கில் இருக்கும்.
இந் நிலையில் நயன்தாராவின் தந்தை குரியன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். கேரளாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் மிகவும் சீரியசான நிலையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரது பெற்றோர் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும், தந்தை இப்படி உள்ள நிலையில் எப்படி என்று அவர் மறுத்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
திருமண விவகாரத்தில் மவுனமாக இருப்பதாகவும், என்ன காரணம் என்று தெரியாமல் நயன்தாராவின் குடும்பத்தினர் குழம்பி போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தந்தையின் உடல்நலம் பூரண குணம் அடைந்த பின்னர் மற்ற விஷயங்களை பற்றி பேசலாம் என்று அவர் கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.