Sunday, May 04 12:38 pm

Breaking News

Trending News :

no image

தமிழகத்தில் திறக்கப்படும் கல்லூரிகள்…! நாளை முதல் அட்மிஷன்…! எப்படி சேருவது…?


சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் இன்று (25/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021- 2022) விண்ணப்பங்களை  www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து 'AFC' மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பத்தாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் பதிவுக் கட்டணம் மட்டும் ரூபாய் 2 செலுத்த வேண்டும்.

மற்றவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.48ம், பதிவு கட்டணம் ரூ.2ம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai- 6" என்ற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Most Popular