5 வருஷம், 58 நாடுகள்..! ரூ.517 கோடி…! எல்லாம் மோடி.. எதிலும் மோடி…!
டெல்லி: பிரதமர் மோடி 5 ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
அவரின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ .517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மோடியின் வெளிநாட்டு பயணம் மக்களின் பொருளாதார வளர்ச்சி, நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்த முக்கிய பங்களித்தன என்றார்.
இந்த விவரங்களையும் வெளியிட்ட பின்னர், சுய விளம்பரம், செல்பி போட்டோக்களுக்காக மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.