கேப்டன் தொகுதியை 'கோட்டை' விட்ட அண்ணி….! இனி தேமுதிக நிலை என்ன…?
சென்னை: விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா தோல்வி அடைந்தார்.
மக்கள் ஆட்சி மாற்றத்தை மனதில் வைத்து வாக்களித்தது, இன்றைய தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. மற்ற கட்சிகளை விட கடைசி கட்டத்தில் கூட்டணி அமைப்பது வரை திணறிய தேமுதிக இந்த தேர்தலில் தோல்வியிலும், தோல்வி படுதோல்வி அடைந்துள்ளது.
அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 60 தொகுதிகளில் களம் கண்டது. குறிப்பாக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். தொடக்கம் முதலே எந்த சுற்றிலும் முன்னிலை பெறாமல் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தார்.
கிட்டத்தட்ட அனைத்து சுற்றுகளின் வாக்குகளிலும் தொடர்ந்து பிரேமலதா பின்னடைவை சந்தித்த அவர், கடைசியில் தோற்று போனார். ஒரு காலத்தில் அதாவது 2006ம் ஆண்டில் தேமுதிக எழுச்சி பெற்று போது இதே தொகுதியில் வென்று காட்டி அசத்தியவர் விஜயகாந்த். ஆனால் அந்த தொகுதியை கோட்டைவிட்ட அண்ணியார் மீது கேப்டனின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.