ஸ்டாலினின் இந்தி வாத்தியார்…! பாஜக ‘லீக்’ செய்த சீக்ரெட்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும், அவருக்கு இந்தி பண்டிட் வேண்டும் என்று பாஜக கிண்டலடித்துள்ளது.
இந்தி தெரியாது போடா… இந்த வாசகம் தமிழகத்தின் முக்கிய முழக்கமாக கடந்த காலங்களில் இருந்தது, தற்போதும் இருந்து வருகிறது. ஆனால் பாஜக மற்றும் இந்துத்துவா சார்பு அமைப்புகள், இயக்கங்களுக்கு இந்தி என்றால் அதீத ஆர்வம்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தியில் பேச… அப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்று டிஆர் பாலு, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தினர்.
அதற்கு அவர் நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று பதிலடியாக பேசியதாக தெரிகிறது. சமூக வலைதளத்தில் இந்த விவரம் பெரும் விவாதமானது… இப்போதும் பேசு பொருளாகி உள்ளது.
இந்த நிலையில் ஸ்டாலினை இந்தி கற்றுக் கொள்ளுமாறு பாஜக கேலி, கிண்டல் செய்துள்ளது. இது பற்றி எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளது. பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
https://twitter.com/BJP4TamilNadu/status/1738063115462582687
இந்தி கற்க கட்டணத்தை நிதிஷ்குமார் செலுத்தி விடுவார் என்றும் அதில் நெத்தியடியாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பதிவு இப்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.