இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாகக்கூடும் என்பதால் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்க உள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு பக்கம் கனமழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4431 கன அடியாக உயர்ந்துள்ளது. மழை மேலும் தொடரும் பட்சத்தில் அணை வேகமாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க வழிபட்டனர்.
அரியானாவில் இன்று அதிகாலை 4 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏதேனும், பாதிப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப திருவிழா என்பதால் பூக்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவு பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை 2200 ரூபாயாகவும், செவ்வந்தி 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
குடிமை பணித்தேர்வான யுபிஎஸ்இ தேர்வை மாநில மொழிகளில் நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
553வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வயதில் இளையவராக இருந்தாலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்ற தாம் விரும்புவதாக பிரபல நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறி உள்ளார்.
திருவனந்தபுரத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கான 3வது டி 20 கிரிக்கெட் போட்டிக்காக கிட்டத்தட்ட 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. எஞ்சிய 12 ஆயிரம் டிக்கெட்டுகளும் விரைவில் விற்று தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.