கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒத்துக் கொள்ளாத நடிகர் கார்த்தி….!
சென்னை: கோடி ரூபாய் கொடுத்தாலும் சினிமாவில் தம் அடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்பதில் இன்னமும் உறுதியாக இருக்கிறார் நடிகர் கார்த்தி.
டைரக்டர் என்ற கனவுடன் சினிமா உலகில் வந்தவர் நடிகர் கார்த்தி. பருத்தி வீரனாக மாறி இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான சுல்தான் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது.
தமது படத்தில் தொடர்ந்து கடைபிடித்து வரும் கொள்கையை பற்றி இப்போது மீண்டும் அனைவருக்கும் நினைவூட்டி இருக்கிறார் நடிகர் கார்த்தி. அவர் கூறியிருப்பதாவது:
என் ரசிகர்கள் கெட்டு போக நான் காரணம் ஆக மாட்டேன். ஆகையால் எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார். தமது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறார்.
மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தமது இருப்பிடத்தை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம்.
தம்பிகள் அனைவரும் உங்களையும், உங்களது குடும்பத்தாரையும் பார்த்து கொள்ள வேண்டும். இதுதான் எனது பிறந்த நாளுக்கு நீங்கள் தரும் பரிசு என்று அந்த கடிதத்தில் நடிகர் கார்த்தி குறிப்பிட்டு இருக்கிறார்.