4000 கோடி என்னாச்சி..? ‘போட்டு’ தாக்கிய அமைச்சர் அண்ணாச்சி
சென்னை: 4000 கோடி ரூபாய் என்னாச்சு என்ற கேள்விக்கு அமைச்சர் கேஎன் நேரு ஒருவழியாக பதில் அளித்திருக்கிறார்.
மிக்ஜாம் வந்து போய்விட்டது… 4000 கோடி என்னாச்சு? எங்கே போச்சு? என்ற கேள்வி இன்னும் போகவில்லை. சென்னையை துவட்டி எடுத்த பேய் மழை நின்றுவிட்டாலும் அள்ளி கொடுத்த வெள்ள நீர் புறநகர் பகுதிகளை இன்னமும் குளிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
மீட்பு பணிகள், நிவாரணம் என ஒன்றும் சரியில்ல என்று மக்கள் ஒரு பக்கம் தமிழக அரசை கரித்துக் கொண்டு இருக்க… மறுபக்கம் சமூக ஊடகங்களில் 4000 கோடி மேட்டர் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது.
சென்னைக்கு 4000 கோடி ரூபாயில் நலப்பணிகள் செய்த பின்னரும், குளமாய் தண்ணீர் தேங்கி இருக்கிறதே? எப்படி? என்பது தான் பிரதான மற்றும் மைய கேள்வியாய் உலா வருகிறது.
இதே கேள்வியை ட்ரோல் செய்ய டிசைன், டிசைனாக டுவிட்டராட்டிகள் தரப்பில் இருந்து பதில்கள் வந்து விழ ஆரம்பித்துள்ளன. இப்படித்தான் சென்னையில் நிவாரண பணிகளை பார்வையிட அமைச்சர் கேஎன் நேரு சென்றார்.மக்கள் அவர் முன் திரண்டு நிற்க, ஊடகங்கள் விடவில்லை.
தம்மை சுற்றி அரணாக இருந்த ஊடகங்களின் மைக்கை பார்த்து கேஎன் நேரு பேசினார். அப்போது மக்கள் கோவமா இருக்காங்களே? என்ற கேள்வி முன் வைக்கப்பட, அதற்கான பதிலும் அங்கிருந்த மக்களிடம் இருந்து வந்தது.
விடாமல் செய்தியாளர்கள் 4000 கோடி ரூபாய் மேட்டரை கிளற, பளிச்சென்று பதிலளித்துள்ளார் கேஎன் நேரு. அவரின் பதில் ஏன் இப்படி? என்று கேள்வி எழுந்து வந்தாலும், அதை கேட்ட மக்கள் கோபப்படவில்லை என்பது தான் யதார்த்தம்.
அமைச்சர் கேஎன் நேரு பதிலளித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.