கொரோனா கொண்டு போன உயிர்…! பழம் பெரும் இசையமைப்பாளர் மகன் மரணம்…!
சென்னை: பழம்பெரும் இசையமைப்பாளரும், பிரபல டப்பிங் கலைஞருமான கண்டசாலா ரத்னகுமார் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.
தமிழ் படங்களில் பழம்பெரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் கண்டசாலா. இவரது மகன் கண்டசாலா ரத்னகுமார். மிகவும் புகழ்பெற்ற டப்பிங் கலைஞர். இவர் 1500 படங்களுக்கு மேலாக டப்பிங் குரல் தந்திருக்கிறார்.
திரையுலகில் இவரை அறியாதவர்கள் வெகு குறைவு. சினிமாவுக்கு மட்டும் அல்லாமல் சீரியல்களுக்கும் டப்பிங் கொடுத்து இருக்கிறார். 8 மணி நேரம் இடைவிடாமல் பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து சாதனை படைத்தவர்.
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கண்டசாலா ரத்னகுமார், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக டயாலிசிஸ் செய்து வந்த போதும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கண்டசாலா ரத்னகுமாரின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தாருக்கு திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.