தனுஷை அமெரிக்காவில் இருந்து வரமுடியாமல் செய்த ரஜினிகாந்த்…!
சென்னை: அமெரிக்காவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக செல்ல இருப்பதால் நடிகர் தனுஷ் அங்கேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அண்ணாத்த படத்தில் தமது போர்ஷன் அனைத்தும் பக்காவாக முடித்துக் கொடுததுவிட்டு சென்னையில் உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படம் அனேகமாக வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று தெரிகிறது. கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி போனாலும் எப்படியாவது தீபாவளி ரிலீசாக அண்ணாத்தேவை கொண்டு வந்துவிட வேண்டும் என்று படத்தயாரிப்பு குழு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
பட வேலைகள் முடிந்துள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் வெகு விரைவில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளாராம். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டதாம்.
அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி ஓரிரு நாளில் தனி விமானத்தில் அமெரிக்கா செல்கிறார். மத்திய அரசின் அனுமதிக்காக அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகரும் தமது மாமனாருமான ரஜினிகாந்த அமெரிக்கா வர உள்ளதால் அங்கே இருக்கும் நடிகர் தனுஷ் நாடு திரும்பாமல் அங்கேயே உள்ளாராம். நடிகர் தனுஷ் அமெரிக்காவில் தான் கடந்த 3 மாதமாக இருக்கிறார். அவர் ஹாலிவுட் படமான கிரே மேன் படத்தில் நடிக்கிறார். அதன் ஷூட்டிங்குக்காக தான் அவர் அமெரிக்காவில் உள்ளார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்த பின்னரும் ரஜினிகாந்த் வருவதால் தனுஷ் சென்னை திரும்பாமல் அமெரிக்காவிலேயே இருக்கிறார். வழக்கமாக ரஜினி அமெரிக்கா செல்லும் போது எல்லாம் ஐஸ்வர்யா தனுஷ் தான் உடன் சென்று வேண்டியவற்றை பார்த்து கொள்வார். ஆனால் இந்த முறை தனுஷூம் உடன் இருக்க போகிறாராம். அமெரிக்காவில் தனுஷ் இருக்கும் அதே நேரத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் நாளை நெட்பிளக்சில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.