Sunday, May 04 01:04 pm

Breaking News

Trending News :

no image

வாடிக்கையாளர்களே…! வங்கிகளில் 2 நாட்கள் யாரும் பணம் எடுக்க முடியாது…!


டெல்லி: நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தின்படி 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனியார்மயமாக்கலை கண்டித்து இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி 2 நாள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கி உள்ளது. இந்த 2 நாட்களிலும் வங்கிகள் இயங்காது, பணவர்த்தனை உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது.

வங்கி ஏடிஎம்களில் போதிய பணம் இல்லாததால் வாடிக்கையாளர்களும் அவதிப்படும் சூழல் எழுந்துள்ளது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ச்சியாக 4 நாட்களும் வங்கிகள் இயங்காது என்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Most Popular