கொரோனாவை ஒழிக்க ஸ்டாலின் சொல்லும் யோசனை…! மக்களே பின்பற்றுங்கள்…!
சென்னை: கொரோனா பரவலை தடுக்க மக்கள் இயக்கமாக செயல்படுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் 2வது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந் நிலையில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் இயக்கமாக செயல்படுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
அவசர, அவசியம் இன்றி யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். நோய் பரவாமல் தடுப்பது, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது ஆகிய இரண்டும் தான் தமது அரசின் குறிக்கோள். தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து கட்டுபாடுகளையும் மக்கள் மிக கவனமாக பின்பற்ற வேண்டும்.
அனைத்து கட்டுபாடுகளும் மக்களின் நன்மைகளுக்காகவே போடப்படுகின்றன என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். கட்டுபாடுகளை நாம் பின்பற்றாவிட்டால் நோய் பரவல் அதிகரித்துவிடும். ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் சங்கிலியை உடைக்காமல் கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.