இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 33 லட்சம்…! ஷாக் நிலவரம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துவிட்டது.
8 மாதங்களை கடந்தும் இன்னமும் உலக நாடுகளை உலுக்கி வருகிறது இந்த கொரோனா. உலகில் 200க்கும் அதிகமான நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது. இந்தியாவும் அதில் இருந்து தப்பவில்லை.
மார்ச் கடைசி வாரம் முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் கொரோனாவின் வேகம் குறையவில்லை. நாள்தோறும் அதன் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 33 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
கடந்த 24 மணிநேரத்தில் 75,760 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 235 ஆகும்.
7 லட்சத்து 25 ஆயிரத்து 991 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,472 ஆகும். இதுவரை கொரோனாவில் இருந்து 76.30 சதவீதம் பேர் குணம் அடைந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.