கேரளாவில் 24 மணி நேரத்தில் 9,250 பேருக்கு கொரோனா தொற்று…!
திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 9,250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 68 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 756 ஆக உள்ளது.
அதே போல், கேரளாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர்.கேரளாவில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 1.75 லட்சம் பேர் பேர் குணமடைந்துள்ளனர்.