Sunday, May 04 01:07 pm

Breaking News

Trending News :

no image

நடிகர் விஜயின் நண்பன் படம் போல நடந்த சம்பவம்...! ஒட்டு மொத்த உலகமும் ஷாக்..!


பெங்களூரு: கர்நாடகாவில் நண்பன் சினிமா பாணியில் பெண் ஒருவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், சங்கரின் இயக்கத்தில் வெளியான படம் நண்பன். அந்த படத்தில் சத்யராஜ் மகளுக்கு வீடியோ கால் மூலம் ஆலோசனை கேட்டு விஜய் பிரசவம் பார்ப்பார். திரைப்படத்தில் இந்த காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன.

இந் நிலையில் இந்த திரைப்பட காட்சியை போல கர்நாடகாவில் நிஜமாகவே ஒரு பிரசவம் நடந்திருப்பத ஆச்சரியத்தை அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி.

நிறைமாத கர்ப்பிணி. கடந்த ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக வசந்தியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். இதையடுத்து மருத்துவர் பிரியங்கா என்பவரை அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர்.

உடனடியாக வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் கூறிய அறிவுரைகள் கூற, அதை பின்பற்றி அவர்கள் வசந்திக்கு பிரசவம் பார்த்தனர். இந்த பிரசவத்தில் வசந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும்  நலமாக இருக்க உள்ளுர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நண்பன் திரைப்படம் போலவே வாட்ஸ்அப் வீடியோ பிரசவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular