பெரியாரை இழிவாக பேசி… பேடியாய் ஒளிந்து கொண்ட கனல் கண்ணன்…!
சென்னை: பகுத்தறிவு பகலவன் பெரியாரை இழிவாக பேசிய கனல் கண்ணன் தலைமறைவாகி உள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் பொறுப்பில் இருப்பவர் கனல் கண்ணன். திரைத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டர். சண்டை காட்சிகள் அமைப்பதில் வல்லவர். இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தில் பெரியாரை பற்றி கேவலமாக பேச போய் இப்போது செமத்தியாக வம்பில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்.
மதுரவாயலில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று வார்த்தைகளை கக்கி இருக்கிறார்.
கடவுள் இல்லை என்று சொன்னவன் சிலை (பெரியார்) எதற்கு கோவில் முன்பு இருக்க வேண்டும், அதை இடிக்க வேண்டும், ரங்கநாதர் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் பெரியார் சிலையை பார்த்தால் நல்லா இருக்காது, அதை உடைத்தால் தான் உண்மையா எழுச்சி என்று பேசியிருக்கிறார்.
இவரின் பேச்சுக்கு திக,தபெதிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டங்கள் எழுப்பி உள்ளனர். இது குறித்து தபெதிகவினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையறிந்த கனல் கண்ணன் இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. தலைமறைவாகி உள்ளார். போலீசார் கைது செய்ய போகிறார்கள் என்பதை அறிந்து தமது வீட்டில் இருந்து வெளியேறி எங்கேயோ தலைமறைவாகி விட்டார்.
கனல் கண்ணன் வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவர் எங்கு உள்ளார் என்று தெரியாது என்று குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதை உணர்ந்த கனல் கண்ணன் முன் ஜாமின் பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.