பொதுக்குழு விவகாரம்…! வெளியானது தீர்ப்பு…! டென்ஷனில் அதிமுக தொண்டர்கள்
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில் அதற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்ற அறிவித்து இருந்தது.
அதன்படி காலை 9 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதின்றம் கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை நடத்தி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.