Sunday, May 04 11:49 am

Breaking News

Trending News :

no image

இன்னிக்கு அந்த ‘2’ பேர்… ! கன்னத்தில் ‘கை’ வைத்த கமல்…!


சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்மபிரியா, சந்தோஷ் பாபு இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளது கமல்ஹாசனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மே 2ம் தேதி முதல் கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. சட்டசபை தேர்தல் முடிவுகள் எதிரொலியாக கட்சிக்குள் புகைச்சல் ஆரம்பமானது.

தான் உட்பட வேட்பாளர்களாக நின்ற அனைவரும் தோற்று போய்விட கட்சிக்குள் பூகம்பம் வெடித்தது. முதல் ஆளாக துணை தலைவர் மகேந்திரன், பொன் ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகினர்.

அவர்களின் விலகலும் அது தொடர்பாக மகேந்திரன் வெளியிட்ட அறிக்கையும் மக்கள் நீதி மய்யத்தில் பூகம்பத்தை கிளப்பியது. கமலின் படு சூடான அறிக்கை வெளியாக மேலும் பரபரப்பு நிலவியது.

இந் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் தொகுதி வேட்பாளராக நின்ற பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். அவரை தொடர்ந்து வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபுவும் விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ்சான இவர் 6 நாட்களுக்கு முன்பு தான் ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் தர கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்று டுவிட் போட்டிருந்தார்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேர் கட்சியில் இருந்து விலகியதால் கமல்ஹாசன் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் அடுத்த நிலைப்பாடு என்ன எடுப்பது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன.

Most Popular