திமுக கூட்டணியில் இணைந்த மேலும் ஒரு முக்கிய கட்சி..! 3 தொகுதிகளை ஒதுக்கி அசத்தல்
சென்னை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன் முடிவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், திமுகவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு எடுத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.