Sunday, May 04 12:59 pm

Breaking News

Trending News :

no image

ஸ்டாலின் ஜாதகம் சொல்வது என்ன..? அடுத்து எதிரிகள் காணாமல் போவார்களா…?


சென்னை: அடுத்து வரக்கூடிய எந்த பிரச்னைகள் என்றாலும் முதலமைச்சர் ஸ்டாலின் ஜாதகம் எப்படி இருக்கிறது இணையத்தில் அனைவரும் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டனர்.

நாட்டை ஆளும் யோகம் வசிக்கும் அத்தனை மக்களுக்கும் வந்துவிடாது. அதே போல மக்கள் சக்தியும் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. அரசியல் கட்சி வைத்திருக்கும் அனைவருக்கும் அரசாளும் பாக்கியம் அல்லது யோகம் வாய்த்துவிடாது.

தமிழகத்தின் மிக பெரிய கட்சித் தலைவர், நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் ஜாதகம் இப்போது எப்படி இருக்கிறது? என்ன சொல்கிறது என்று சில குறிப்புகள், செய்திகள் இணையத்தை ரவுண்டு கட்டி வருகின்றன. அவரது ஜாதகத்தில் என்ன உள்ளது? யோக அமைப்புகள் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஸ்டாலின் லக்னம் சிம்மம், ராசியும் சிம்மம். அவரின் லக்னத்துக்கு 3ம் வீடு துலா. இந்த துலாம் ராசியில் சனி உச்சம் பெற்று இருக்கிறார். 6ம் வீடான மகர ராசியில் ராகு, 7ல் சூரியன், 8ம் வீடான மீனத்தில் புதன், செவ்வாய், 9ம் வீடான மேஷத்தில் குரு சுக்கிரன், 12ல் கேது கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

மாசி மகத்துக்கு அடுத்த நாள்.. பூரத்தில் பிறந்ததே ஸ்டாலின் சிறப்பாக யோகம். சந்திரன் சிம்ம ராசியில் அமர்ந்து லக்னாதிபதி சூரியனை பார்ப்பதால், சிம்மராசி சந்திரனுக்கு குரு பார்வை கிடைக்கிறது. குருவானது லக்னத்தை பார்ப்பதும் வெகு சிறப்பே.

சுக்கிரன், குரு பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் சுபத்துவம் கொண்டு சஞ்சரிக்கின்றனர். தந்தையால் அவருக்கு அரசியல் யோகம் கிட்டியது. புதன் நீச்சம் பெறுகிறார். சந்திரனுக்கு 8ல் புதன் சென்றால் அந்த நீச்சம் பெற்ற நிலை அடிபடுகிறது. 6ல் ராகு எதிரிகளை அழிக்கும் வல்லமை தந்துள்ளது.

ஸ்டாலின் பிறந்தது முதலே உயர்வான வாழ்க்கை தான். இளம் வயதிலே அவரது அரசியல் பயணம் சிறந்த உதாரணம். குரு திசையில் பதவிகள் அவரை நோக்கி வந்தன. மேயர்,துணை முதல்வர் என வலம் வந்தார்.

சிம்ம லக்னத்துக்கு சனி ஆகாது. அவருக்கு சனி திசை தொடங்கியதில் இருந்து சோதனையான தருணம். அதனால் தான் 2011, 2016 அதிகாரத்தை தொட முடியாமல் இருந்தது. சனி திசை சூரியன் புத்தி அமைப்பில் உள்ளதால் தற்போது ஆளும் அரியாசனம் அவரை தேடி வந்திருக்கிறது. சிவராஜயோக அமைப்பும் கதவை தட்டி கொடுத்திருக்கிறது.

ஸ்டாலின் ஜாதகத்தில் இருப்பது மகாஜாதக யோகம். இப்படிப்பட்ட யோகம் பெற்றவர்கள் மிக பெரிய பாக்கியசாலிகள். நாடு, அதன் ஒரு பகுதியை திறம்பட நடத்தி ஜெயிக்கும் யோகம் கொண்டவர். எக்கச்செக்க செல்வாக்கு கிடைக்கும்.

எதிரிகளாக நினைத்து ஸ்டாலினை சீண்டியவர்கள் எல்லாம் இப்போது நட்பு பாராட்டுவார்கள். 6ம் வீட்டில் ராகு எதிரிகளை ஜெயிக்கும் தன்மையை தந்துள்ளார். இப்போது மட்டுமல்ல… அடுத்து வரக்கூடிய தேர்தலிலும் ஜெயிக்கும் அளவுக்காக தசாபுத்திகள் உள்ளது, கூடுதல் சிறப்பு அம்சம்…!

Most Popular